Friday, October 28, 2011

யாருடா இவன்?




வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாட்டில், ஒரு கிராமத்தில் பிறந்து, தமிழ் மீடியத்தில் படித்து, இன்று எல்லாரும் மதிக்கக்கூடிய........
- தம்பி, புது ப்ளாக் எழுத போறியா?
அண்ணே, கொஞ்சம் இருங்கண்ணே! ஒரு flow-ல சொல்லி முடிச்சுடரனே? இன்று எல்லாரும் மதிக்கக்கூடிய அளவில் அமெரிக்காவில்.........
- S/W -ல வேலை செய்யுறியா?
ஹி ஹீ...ஏண்ணே, அமெரிக்கா-னு ஒரு வார்த்தை-தான சொன்னேன்? அமெரிக்கா-வில் S/W-ல் வேலை செய்தாலும் என்னுடைய சிந்தனை முழுவதும் இலக்கியத்தின் மீதே இருந்தது!
- உன்னோட மேனேஜர் ஈமெயில் id -அ குடுப்பா?
இருங்கண்ணே! கடைசியா இந்த தமிழ் சமுதாயத்துக்கு நான் எதாவது செய்யணும் என்ற முடிவோடு, இரவெல்லாம் கண்விழித்து .....
- online-ல தமிழ், இங்கிலீஷ், இரான், கொரியா, உகண்டா-னு ஒரு படம் விடாமா பாத்துட்டியா?
இல்லண்ணே! இரவெல்லாம் கண்விழித்து யோசித்தேன். அது ஐயாவோ, அம்மாவோ - அடிமைபட்டு இருக்கும் நம் தமிழ் நெஞ்சங்களுக்கு ஒரு விடிவு....
- தம்பி தம்பி தம்பி...உங்களுக்கு அரசியல்லயும் நெறைய தெரியும் போலிருக்கு?
என்ன சொல்ல விடுங்கண்ணே! ஒரு விடிவு பிறக்கனும்னா, எல்லாருக்கும் ஒரு விழிப்புணர்வு வேண்டும்.
"நவீனத்துவம்,
பின்நவீனத்துவம்
என்பார் - ஆங்கே
சமத்துவம்
இல்லாதவர்!"
- ??? !!!! கவிதை மாதிரி இருக்குது???
கவிதை மாதிரி சாப்ட்-ஆனது இல்லங்க sportsman -ஓட வாழ்கை. Did we ever experience the burden like Dhoni when he faced the crowd at the third ODI at fourth down for fifty more runs to win. Yes, Ofcourse its all his sixth sense to plan and make the team members to...
-யப்பா, நிறுத்துப்பா! மறுபடியும் கேக்கறேன்னு தப்பா நெனச்சுக்காத! புதுசா ப்ளாக் எழுத போறியா?
இதற்கு ஆமாம் என்று நான் சொல்லப்போகும் பதிலை எதிர்பார்க்கும் உங்களுடைய எண்ண அலைகளை, தவிடு பொடியாக்கும் அளவிற்கு என் இதயம் அவ்வளவு கல்லாகி விடவில்லை என்பதை, நாளை இந்த ப்ளாக்-ஐ படிக்க போகும் நம் சந்ததியினர்க்கு தெரியபடுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் நிற்கின்றோம்....
- இததானடா நான் முதல்லயே கேட்டேன்?? ச்சை....எழுதி தொலை.....

2 comments:

  1. வாங்க வாங்க, வந்து நீங்களும் ஜோதில ஐக்கியமாகுங்க. வந்தற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

கவலைப்படாதீங்க! வெட்கபடாதீங்க! கூச்சப்படாதீங்க! உங்க தைரியம்-தான் இந்த பதிவுலகை வாழவைக்க போகுது??!!! அட! சும்மா நாலு திட்டாவது திட்டுங்க, பாஸ்!